விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் குறித்த எண்ணிக்கை 64.73% ஆக பதி வாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த பரீட்சையில் மொத்தமாக 274,361 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 222,774 பேர் பாட சாலை பரீட் சாத்திகளாவர். அதன்படி, 177,588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொது வாக 2021ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய வர்களில் 62.89% வீத மானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கையானது 2022ஆம் ஆண்டில் 63.25%ஆகவும், 2023இல் 64.33%ஆக அதி கரித்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 64.73%ஆக அதிகரித்து ள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். இங்கே அவதானிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால், மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரே அளவில் இருப்பது அவதானிக்கப்படுகிறது, 3.45% சதவீதத்தைக் காட்டும் இதன் எண்ணிக்கையானது 9,457ஆக காணப்படுகிறது.