மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி கைது செய்யப்பட்ட பெண்கள்

 

கொழும்பு - கல் கிஸ்ஸ பொலி ஸ் பிரிவின் மெலிபன் சந்தி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பில் , இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நட வடிக்கை நேற்று செவ்வாய் க்கிழமை (29) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது விபச்சார விடுதியை நடாத்திவந்த சந்தேக நபரும், விபச்சாரத்தில் ஈடுபட தங்கியிருந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்ய ப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை மற்றும் உக்குவெல பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர் பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.